இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு அஞ்சலி

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடம் சிவக்குமார சுவாமிகள் மறைந்ததையடுத்து குடியாத்தத்தில்

Updated On :23 ஜனவரி 2019, 8:38 am IST

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள சித்தகங்கா மடம் சிவக்குமார சுவாமிகள் மறைந்ததையடுத்து குடியாத்தத்தில் அவரது உருவப் படத்துக்கு வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தத்தை அடுத்த போடிப்பேட்டையில் வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றின் கும்பாபிஷேகம் சில ஆண்டுகளுக்கு  முன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவக்குமார சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். 
இந்நிலையில் அவர் மறைந்ததையடுத்து வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் போடிப்பேட்டை பகுதியில் சிவக்குமார சுவாமிகளின் உருவப் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான லிங்காயத்து சமுதாயத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.