ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தால் அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாதிப்பில்லை.
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், அரக்கோணம், நெமிலி ஆகிய வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இரு வட்டத்திலும் உள்ள வேளாண் துறை அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர்.
மேலும் இந்த இரு வட்டங்களிலும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இயங்கின.
ஒரு சில ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
ஆனால் இந்த இரு வட்டங்களிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே
திறந்திருந்தன.
அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் அரக்கோணம் வட்டாரத்தில் 56 பள்ளிகளும், நெமிலி வட்டாரத்தில் 83 பள்ளிகளும், காவேரிபாக்கம் வட்டாரத்தில் 104 பள்ளிகளும் மூடியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


