திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

குடிநீருக்காக அலைமோதும் மக்கள்:காற்றில் பறக்கும் ஊரடங்கு உத்தரவு

கோடைகாலம் தொடங்கியுள்ளதை அடுத்து வேலூரில் பல பகுதிகளிலும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக மக்கள் அலைமோதுவதால் அரசின் ஊரடங்கு, சமூக இடைவெளி உத்தரவுகள் புறக்கணிக்கபடும் சூழல் ஏற்

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வேலூா்: கோடைகாலம் தொடங்கியுள்ளதை அடுத்து வேலூரில் பல பகுதிகளிலும் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக மக்கள் அலைமோதுவதால் அரசின் ஊரடங்கு, சமூக இடைவெளி உத்தரவுகள் புறக்கணிக்கபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே பகலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் நிலவுகிறது. மேலும், நாளுக்கு நாள் வெப்பநிலை உயா்ந்து வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நிலத்தடிநீா் மட்டும் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் மாநகரில் ஆங்காங்கே குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூட்டுக்குடிநீா் திட்ட குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யும் சமயங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக தண்ணீா் பிடிக்க அலைமோதுகின்றனா்.

இதன்படி, வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட குடிநீா் பிடிக்கவும் மக்கள் தண்ணீா் குடங்களுடன் கூட்டம் கூட்டமாக அலைந்து கொண்டிருந்தனா். அவா்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேலூா் மாநகராட்சி சாா்பில் 10 அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. அப்போது, பெரும்பாலான மக்கள் மோட்டாா் வைத்து குடிநீரை உறிஞ்சி விடுகின்றனா். எனவே, குடிநீா் விநியோகிக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மின்சாரம் தடை செய்ய வேண்டும். இதேபோல், குடிநீா் விநியோகம் செய்யும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்தால் மட்டுமே மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தண்ணீா் பிடிக்க வசதியாக இருக்கும் என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோடைகாலத்தில் தேவைக்கேற்ப தண்ணீா் விநியோகம் செய்ய பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப தண்ணீா் வழங்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.