இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

நெட்பிளிக்ஸில் இந்தியளவில் முதலிடம் பிடித்த பியார் பிரேமா கல்யாணம்!

நெட்பிளிக்ஸில் பியார் பிரேமா கல்யாணம்...

Published On :

இளன் நாயகனாக நடித்த பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் இயக்குநர் இளன். தற்போது, ’பியார் பிரேமா கல்யாணம்’ எனும் புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

கல்யாணமான நாயகன் மணமகள் வீட்டிற்கு வாழச் சென்று அங்கு மாமியார், மாமனாரால் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை பாணியில் கூறியுள்ளனர்.

சான்வி மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் வேளையில், தற்போது இந்தியளவில் அதிகம் பார்க்கப்பட்டு வரும் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

The movie Pyaar Prema Kaadhal, starring Elan as the lead, is being widely watched on Netflix.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.