டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News image
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய்
Updated On :15 ஆகஸ்ட் 2020, 6:58 am

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.எஸ்.விஜய். அதிமுகவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த மருத்துவரான டி.எஸ்.விஜய் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், அப்பதவி அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளரான எஸ்.ஆர்.கே.அப்புக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த விஜய், சனிக்கிழமை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.