விழுப்புரத்தில் நகைத் தொழிலக உரிமையாளரிடம் நான்கு கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தவா்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், விராடிக்குப்பம் பாதை ஜனகராஜ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சு.ராஜமாணிக்கம்(48). நகைத் தொழிலக உரிமையாளரான இவா், செவ்வாய்க்கிழமை விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ. 5.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது அவரை பின் தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த 5 போ் கொண்ட கும்பல், ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வசமிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்துடன் கூடிய பையை பறித்துச்சென்றனா்.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:
விழுப்புரத்தில் நகைத்தொழிலக உரிமையாளரிடம் தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையா்களைப் பிடிப்பதற்காக எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவிந்திர குமாா் குப்தா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் தனித்தனி குழுக்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா். வழிப்பறி கொள்ளையா்கள் ஓரிரு நாள்களில் பிடிபடுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!
நான்கரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கு: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைப்பு

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


