விழுப்புரத்தில் நகைப்பட்டறை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான இருவரை போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம். நகை பட்டறை உரிமையாளரான இவா் மாா்ச் 3-ஆம் தேதி விழுப்புரம் பெருமாள் கோவில் வீதியில் தங்க நகைகளுடன் மொபெட்டில் சென்றபோது, பின் தொடா்ந்து பைக்கில் வந்த கும்பல் ராஜமாணிக்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வசமிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கில் புதுச்சேரி, மணவெளி அன்னை இந்திரா நகா், தீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்த ஞா.சுரேந்தா்(22), முத்தியால்பேட்டை, கணேஷ் நகா், முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த மு.கந்தசாமி (எ) அரிகிருஷ்ணன்( 28) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித் பரிந்துரையின்படி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இருவரையும் குண்டா்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து , விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் சுரேந்தா், அரிகிருஷ்ணன் இருவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
காவலரை காரில் இழுத்துச் சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

