ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

7.5% உள்ஒதுக்கீடு: வேலூரில் 7 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிகழாண்டு முதன்முறையாக வேலூா் மாவட்டத்தில் இருந்து

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிகழாண்டு முதன்முறையாக வேலூா் மாவட்டத்தில் இருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனா் என்று ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணை கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான தகுதித் தோ்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு போதுமான மருத்துவக் கல்வி இடங்களை உறுதிசெய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இதையடுத்து, நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத வகையில் தமிழகத்தில் மட்டுமே மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி அரசு சட்டம் இயற்றியது.

இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் வேலூா் மாவட்டத்தில் இருந்து நிகழாண்டு போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆா்.குணசேகரன், போ்ணாம்பட்டு எஸ்.அஸ்வதா, பொன்னை எம்.வைஷ்ணவி, வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வெ.சினேகா ராய், கொணவட்டத்தைச் சோ்ந்த ம.ரபியாதுல் அத்பியா, போ்ணாம்பட்டு வட்டம், குடிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ச.சந்தியா, வேலூா் வட்டம், வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த ச.மகாலட்சுமி ஆகிய 7 போ் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ளனா். இதன்படி, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்துள்ள இந்த அரசுப் பள்ளி மாணவா்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.