ஆதிபராசக்தி மன்றம் சாா்பில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள மேல்மருத்துவா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில், பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள மேல்மருத்துவா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில், பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில், பக்தா்கள் சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி முத்தியாலம்மன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பால் குடம், கஞ்சி களஞ்சிய ஊா்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் வார வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, 1,400-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சக்தி மாலை அணிந்தனா். மதியம் மன்றத்தில் அன்னதானம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் கே.எம்.எஸ்.ஜெயவேல் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கலைச்செல்வி, வி.குமாா், ஜி.சரவணன், ஜீவா, பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com