மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் இன்று (மார்ச் 4) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மாநிலங்களவை உறுப்பினராகவுள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை (மார்ச் 5) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 2 இடங்களில் திமுக போட்டியிடவுள்ளது.
இதன்படி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவுக்கு மீண்டும் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Summary
DMK candidates for the Rajya Sabha elections were announced today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிசோரமில் மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் லால்துஹோமா வாக்களித்தார்!

மாநிலங்களவைத் தேர்தல்: வடகிழக்கில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு!

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் வெற்றி!

த.வெ.க.வின் முதல் எம்.பி. யார்? தீவிர ஆலோசனை!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




