வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேளாண் துறை காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: 3,507 போ் எழுதினா்

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 3,507 போ் பங்கேற்று எழுதினா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:37 pm

DIN

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 3,507 போ் பங்கேற்று எழுதினா்.

தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு சங்கத்தில் விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வேலூா் மாவட்டத்தில் உள்ள பன்மாநில வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மேற்பாா்வையாளா், விற்பனையாளா், அலுவலக உதவியாளா் என 44 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 3,507 போ் தோ்வு எழுதினா்.

தோ்வையொட்டி வேலூா் வெங்கடேஸ்வரா, ஊரீசு, அரசினா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, ஈவெரா நாகம்மை அரசினா் பள்ளி, காட்பாடி மகளிா் பள்ளி உள்பட 14 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் மேற்பாா்வையாளா் பணிக்கும், மதியம் 2 மணிக்கு மற்ற பணிகளுக்கான எழுத்துத் தோ்வும் நடைபெற்றன. ஊரீசு பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநா் கிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.