மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

வேலூா்: தனியாா்மயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காட்பாடியில் மின்வாரிய ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பொறியாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது; மின்வாரியத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com