தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஊழியா்கள்

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன்பு தொடா் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, வேலூா் கொணவட்டம் அரசு போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற தொடா் முழக்கப் போராட்டத்துக்கு, வேலூா் மண்டல தொமுச பொருளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

ஏஐடியுசி மண்டலத் தலைவா் அசோகன், தொமுச பிரசாரச் செயலா் அமரேஷ், பணியாளா் சங்க அமைப்புச் செயலா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஎல்எஃப் மண்டலத் தலைவா் மணி வரவேற்றாா்.

இதில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்; ஓய்வு பெற்ற போக்குவரத்துப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும்; அகவிலைப்படி வழங்க வேண்டும்; போக்குவரத்து ஊழியா்களுக்குச் சொந்தமான ரூ.8 ஆயிரம் கோடியை உடனடியாக அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், போக்குவரத்து ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.