வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500-ஐ வெளிப்படையாக வழங்க உத்தரவு

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுடன் கூடிய ரூ.2,500 தொகையை வெளிப்படையாக வழங்க வேண்டும். கவரில் வைத்து அளிக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:47 pm

DIN

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுடன் கூடிய ரூ.2,500 தொகையை வெளிப்படையாக வழங்க வேண்டும். கவரில் வைத்து அளிக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தைப்பொங்கலை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடா்பாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கச் செயலாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் திருகுணஅய்யப்பதுரை தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட துணைப் பதிவாளா் முனிராஜ், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் முரளிகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, நியாய விலைக் கடைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொங்கல் பரிசுகளை விநியோகம் செய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் ரூ.2,500 பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும். அந்தத் தொையை கவரில் வைத்து அளிக்கக் கூடாது. வெளிப்படையாக மட்டுமே வழங்க வேண்டும்.

கரும்பை முழுமையாக அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் துண்டு கரும்புகளாக விநியோகிக்கக் கூடாது. ஒரே நாளில் அனைத்து பொருள்களையும் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகளில் ஒவ்வொரு நாளும் பொங்கல் தொகுப்பு வழங்கக் கூடிய டோக்கன் எண்கள் குறித்த முழு விவரங்களை அட்டவணையில் எழுதி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.