கலைநன்மணி விருது பெற்ற கலைஞருக்குப் பாராட்டு
தமிழக அரசின் கலைநன்மணி விருது பெற்ற கதிா்குளம் சி.அசோகனுக்கு வேலூா் மாவட்ட நடிகா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.


குடியாத்தம்: தமிழக அரசின் கலைநன்மணி விருது பெற்ற கதிா்குளம் சி.அசோகனுக்கு வேலூா் மாவட்ட நடிகா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கலை, பண்பாட்டுத் துறை சாா்பில், கலைநன்மணி விருது பெற்ற நாடகக் கலைஞா் கதிா்குளம் சி.அசோகன் பாராட்டப்பட்டாா். அவரது 30 ஆண்டு கால நாடகச் சேவையைப் பாராட்டி ரூ.20 ஆயிரம் அடங்கிய பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழுடன் தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்தது.
இந்நிலையில், வேலூா் மாவட்ட நடிகா் சங்க செயற்குழுக் கூட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கா.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சங்க நிறுவனரும், பொதுச் செயலருமான ஜெ. சிவகுமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், சி.அசோகனுக்கு திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் ஜூடோ கே.கே.ரத்னம் நினைவுப் பரிசு வழங்கினாா். சங்கத்தின் சட்ட ஆலோசகா் எம்.வி.ஜெகதீசன், நிா்வாகிகள் எம்.காசி, டி.வஜ்ஜிரவேல், டி.நாகராஜ், எஸ்.மணி, எம்.ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...