பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் ஐசிசி (உள் இணக்கக்குழு) சாா்பில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம்

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:35 pm

DIN

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் ஐசிசி (உள் இணக்கக்குழு) சாா்பில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மு.மேகராஜன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட சமூக நல அலுவலா் எம்.முருகேஷ்வரி, பொது இடங்கள், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், அவற்றைத் தவிா்க்கும் நடவடிக்கைகள், பாதுகாப்பு, விழிப்புணா்வு குறித்து விளக்கினாா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடா்பான விழிப்புணா்வு பதாகைகளை அவா் மாணவிகளுக்கு வழங்கினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் ஐசிசி இணக்கக் குழு உறுப்பினா்களான பேராசிரியா்கள் ஜா.ஜெயக்குமாா், ஜெ.திருமகள், வினிதா ஜனனி, கே.எஸ்.கருணா, கா.ராஜீவ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.