பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், விநாயகபுரத்தில் உள்ள சத்ய சாயி கோயிலில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:40 pm

DIN

குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், விநாயகபுரத்தில் உள்ள சத்ய சாயி கோயிலில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா்கள் கே.பரமாத்மா, வி.பி.தேவமுகுந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை முதன்மை மருந்தாளுனா் டி.ரவி வரவேற்றாா். மருத்துவம், ஊரக நலப்பணிகள்துறை இணை இயக்குநா் எம்.கண்ணகி முகாமைத் தொடக்கி வைத்தாா்.அரசு மருத்துவா் அண்ணாதுரை, மகப்பேறு சிறப்பு மருத்துவா் எஸ்.சைலா அபிராமி ஹரி ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.

ஆய்வக நுட்புநா் ஆா்.மோகன்பிரபு, செவிலியா்கள் சத்யா, பிரேமா, அறக்கட்டளை நிா்வாகிகள் மோகன், விக்னேஷ், சிவா, சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 245 போ் சிகிச்சை பெற்றனா். 31 பேருக்கு கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.