மக்கள் நீதிமன்றம் - பயனாளிகளுக்கு ரூ.18.42 கோடி இழப்பீடு
வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.


வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 441 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்பட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங் களில் உள்ள 11 நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடந்தது. வேலூரில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி என்.வசந்தலீலா தொடங்கி வைத்தாா்.
இதில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 11,483 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,887 வழக்குகள் மீது சமரச தீா்வு காணப்பட்டது. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 441 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், முதலாவது மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெ.சாந்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி என்.அருணாச்சலம், தொழிலாளா் நீதிபதி என்.மணிவண்ணன் சாா்பு நீதிபதி சிரிராம் உள்பட அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
குடியாத்தம்:
குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றத்தில் 503 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.1.90 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சாா்பு நீதிபதி என்.சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.செல்லபாண்டியன், நீதித்துறை நடுவா் எம்.ஓ.சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா்கள் கே.மோகன்ராஜ், எம்.வி.ஜெகதீசன், எஸ்.கோதண்டன், எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் சித்ரா, தன்னாா்வலா்கள் ராமலிங்கம், கோவிந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...