தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

வான்கடேவை அமைதியாக்க முடியாத சாம் கரண்..! அடித்து நொறுக்கிய இந்திய வீரர்கள்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மோசமாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் சாம் கரண் குறித்து...

England's Sam Curran reacts after India's Sanju Samson hit a boundary on his delivery during the T20 World Cup cricket semi-final match between India and England in Mumbai, India, Thursday, March 5, 2026. (AP Photo/Rafiq Maqbool)

சஞ்சு சாம்சன் அடித்த சிக்ஸரைப் பார்த்து வாயடைத்துப்போன சாம் கரண். - படம்: ஏபி

Published On :

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் மோசமாக பந்துவீசி, 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார்.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய ரசிகர்களை வான்கடேவில் அமைதியக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியதுபோல அவரால் இந்தப் போட்டியில் செய்ய முடியாமல் போனது பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். சாம் கரண் வீசிய ஸ்லோயர் பந்துகளை (வேகம் குறைவான பந்துகள்) சஞ்சு சாம்சன் சரியாகக் கணித்து, சிக்ஸருக்கு அடித்தார்.

வான்கடே திடலில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். இந்திய ரசிகர்களை அமைதியாக்க விரும்பிய சாம் கரண் இந்தப் போட்டியில் வாயடைத்து நின்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய அணி முதலில் பேட்டி செய்து, 20 ஓவர்களில் 253/7 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் 246/7 ரன்கள் எடுத்தது.

பந்துவீச்சு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சாம் கரண் சரியாக விளையாடவில்லை. 14 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஹார்திக் பாண்டியா, பும்ரா ஓவரில் ரன்கள் குவிக்க சாம் கரண் திணறினார். இறுதியில் பாண்டியா ஓவரில் திலக் வர்மாவிடம் எல்லைக் கோட்டுக்கு முன்பாக கேட்சில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய வீரர்களை அமைதியாக்குவேன் எனக் கூறி 2023 உலகக் கோப்பையில் செய்துகாட்டிய முதல் பலரும் இதைக் கூறிவருகிறார்கள். யாருமே இந்திய அணியை டி20யில் வீழ்த்த முடியாத அளவுக்கு பலமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.