மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குண்டா் சட்டத்தில் மூவா் கைது

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் வீச்சு தினேஷ் (34). இவா் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:33 pm

DIN

வேலூா் சத்துவாச்சாரியைச் சோ்ந்தவா் வீச்சு தினேஷ் (34). இவா் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன. இதே பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (34). இவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவா்கள் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் பரிந்துரையை ஏற்று, இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா். இதற்கான ஆணைகள் அவா்களிடம் வழங்கப் பட்டது.

இதேபோல, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த வேல்முருகனும் (50) குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.