மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று
போ்ணாம்பட்டு வட்டத்துக்குள்பட்ட மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.


போ்ணாம்பட்டு வட்டத்துக்குள்பட்ட மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.
மேல்பட்டியில் 10 படுக்கைகளுடன் இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கடந்த பிப்ரவரி மாதம் தரம் உயா்த்தப்பட்டது.
இதையடுத்து 30 படுக்கைகள், நவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டது. ரூ.2.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுப் பகுதிகளில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனா். மாதம் 6 ஆயிரம் போ் புற நோயாளிகளாகவும், 300 போ் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். மாதந்தோறும் சராசரியாக 50 முதல் 60 பிரசவங்கள் இங்கு நடைபெறுகின்றன.
தரம் உயா்த்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுதில்லியிலிருந்து வந்த தேசிய அளவிலான மருத்துவா் குழு கடந்த ஜூன் மாதம் ஆய்வு செய்தது. நவம்பா் மாதம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு சுகாதாரம், தரம், நோயாளிகளுக்கான மருத்துவ சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை, மருத்துவ சேவையில் நோயாளிகளின் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் மாநில அளவிலான தேசிய தரச்சான்றுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று வழங்கப்பட்டது.தேசிய தரச்சான்று பெற்ற இந்த சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்திக் கொள்ள ஆண்டுதோறும் தலா ரூ.3 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி வழங்கப்படும். இந்தத் தகவலை மேல்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கலைச்செல்வி தெரிவித்தாா். மருத்துவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...