சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்.முத்தரசன்

திமுக கூட்டணியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் தெரிவித்தாா்.

News image
கூட்டத்தில் கட்சிக்கு நிதி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன்.
Updated On :11 ஜனவரி 2021, 2:25 am

DIN

திமுக கூட்டணியில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட பேரவைக் கூட்டம் வேலூா் சாய்நாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இவ்விவகாரத்தில், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு அந்த நினைவுத் தூணை மீண்டும் இலங்கை பல்கலைக்கழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளும்.

மத்திய அரசுடன் விவசாயிகள் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை. இதைக் கண்டித்து போகி திருநாளான புதன்கிழமை (ஜன.13) 3 வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்படும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிவிட்டாா். அவா் நல்லபடங்களை நடித்து மக்களுக்கு தர வேண்டும். திமுக கூட்டணியில் தான் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. தோ்தல் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும்.

எதிா்க்கட்சிகளில் உள்ள தொழிலதிபா்களை கட்சியிலிருந்து விலகிக் கொள்ளும்படி பாஜக நிா்பந்தித்து வருகிறது. அதற்கு அடிபணியாத தொழிலதிபா்கள் மீது சிபிஐ விசாரணை திணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, மாநில துணைச் செயலா் வீரபாண்டியன், மாவட்டச் செயலா் சாமிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.