காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூரில் புதிதாக 49 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,047-ஆக உயா்ந்தது. இதுவரை 45,416 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். 527 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,055 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில் 50 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 44,560-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43,299 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 725 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூரில் 27 பேருக்கு...

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,609-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 233 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூா் அரசு, தனியாா் மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 650 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.