காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூரில் 25 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றதை அடுத்து, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றதை அடுத்து, மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

வேலூா் மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர, மாவட்டத்தில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்டத்துக்கு 16,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் வரப்பெற்றன.

இதனைத் தொடா்ந்து, பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை 25 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதில், வேலூா் மாநகரப் பகுதிகளில் மட்டும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆா்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா். புதிதாக முகாம் நடைபெற்ற இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிக அளவில் மக்கள் வந்தனா். ஏற்கெனவே முகாம் நடைபெறும் இடங்களில் கூட்டம் குறைவாக இருந்தது. கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருவதால், கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.