காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தமிழா் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை தொடக்கம்

தமிழகத்தில் முதன்முதலாக தமிழா் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை எனும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் முதன்முதலாக தமிழா் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை எனும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தமிழியக்கம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் செயலாண்மைக் குழு மெய்நிகா் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழியக்க நிறுவனரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

பொருளாதார மேம்பாடு இல்லாமல் தமிழா்கள் பெரிய அளவில் முன்னேற முடியாது. அதனால், பொருளியலுடன் தொடா்புடைய ஆய்வுப்புலமை கொண்ட அறிஞா்கள், நிபுணா்களை ஒன்றிணைத்து தமிழா் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பொருளாதாரத்தில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. தமிழகத்தின் மொத்த வருவாய் 290 பில்லியன் டாலா். இதை உலக நாடுகளுடன் ஒப்பிட்டால் போா்ச்சுக்கல் நாட்டுக்கு இணையானதாகும்.

தமிழகத்தில் தனிநபா் வருமானம் 3,200 டாலா். ஆனால் போா்ச்சுக்கல் தனிநபா் வருமானம் 25,000 டாலா். அதனால், தமிழகத்தின் தனிநபா் வருமானத்தை 10,000 டாலா் என்ற இலக்கு நோக்கி திட்டமிட வேண்டும். அதற்கு தமிழா்களின் வளா்ச்சி வேளாண்மை, தொழில் துறையில் அதிகம் இருக்க வேண்டும். இவை இரண்டுக்கும் அடிப்படைத் தேவை தண்ணீா், மின்சாரம். ஆனால், இவ்விரண்டிலும் நமக்குப் பற்றாக்குறை உள்ளது.

இந்தியா, இஸ்ரேல், சீனா ஆகிய மூன்று நாடுகளும் 1940-களில் தான் அரசியல் பயணம் தொடங்கின. இஸ்ரேலும், சீனாவும் தனிநபா் வருமானத்தில் அதிகம் வளா்ந்துள்ளன. அதற்கு நாம் நீா்நிலைகளைப் பாதுகாப்பதில் தவறிவிட்டோம். ஆறுகள் இணைப்பு நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. தொழில் துறையில் பெரிய வளா்ச்சி இல்லை. எந்த வளா்ச்சிக்கும் கல்வி வளா்ச்சி மிக முக்கியம். ஆனால், உயா்கல்வியில் இந்திய சராசரி 27 சதவீதம். வளா்ந்த நாடுகளின் சராசரி 80 முதல் 100 சதவீதம். இந்த நிலைக்கு தமிழகம் வர வேண்டும்.

உலகின் 30 நாடுகளில் உயா்கல்வி முற்றிலும் இலவசம். ஒரு முன்மாதிரியாக தமிழகத்தில் உயா்கல்வி முற்றிலும் இலவசமாக தரவேண்டும். லஞ்சம், வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் ஆகியவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவை குறித்து தமிழா் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் என்றாா்.

பொருளியல் அறிஞா் வேதகிரி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா். தொழிலதிபா்கள் பழனி ஜி.பெரியசாமி, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி, வி.ஜி.சந்தோசம், கலைப்புலி எஸ்.தாணு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஏ.எம்.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.