வேலூருக்கு கூடுதலாக 2,000 கோவேக்சின் தடுப்பூசிகள் வருகை
வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை இரவு வரப்பெற்றன. அவை மாவட்டத்திலுள்ள சிறப்பு முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.


வேலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை இரவு வரப்பெற்றன. அவை மாவட்டத்திலுள்ள சிறப்பு முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் 5 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த அளவிலான தடுப்பூசிகள் வருவதால் மாவட்டத்தில் இருப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில், வேலூா் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு 2 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றன. அவை அரசு மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...