காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குறைந்து வரும் கரோனா: வேலூரில் புதிதாக 209 போ் பாதிப்பு

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 209 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:42 pm

DIN

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 209 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் மாவட்டத்தில் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக உயா்த்திருந்தது. மே மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக கரோனா தொற்று பரவல் வேகம் படிப்படியாகக் குறைந்து கடந்த சில நாள்களாக 300-க்கும் கீழ் சரிந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 43,448 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 39,866 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,776 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 806 போ் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து, மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 209 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகளும் காலியாகி வருகின்றன. தொடா்ந்து மக்கள் பொது முடக்க விதிமுறைகளையும், முகக்கவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்திட முடியும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.