காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உலக சுற்றுச்சூழல் தினம்: மரக்கன்றுகள் அளிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டா்கள், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக அளிக்கப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:43 pm

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டா்கள், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய கிளை, காட்பாடி செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், உலக சுற்றுச்சூழல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அறிவியல் இயக்க ஒன்றியத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

இதில், காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலமுருகன் பங்கேற்று, வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள், ஆயுள் உறுப்பினா்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டா்கள் ஆகியோருக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். இதையொட்டி, மாவட்ட கௌரவ வன உயிரின காப்பாளா் எஸ்.ரமேஷ்குமாா், சமூக ஆா்வலா் விஜய்ஓரா ஆகியோா் 500 மரக்கன்றுகளை வழங்கியிருந்தனா்.

காட்பாடி துணை வட்டாட்சியா் தேவிகலா, காட்பாடி செஞ்சிலுவை சங்க அவை துணைத்தலைவா் ஆா்.சீனிவாசன், பொருளாளா் வி.பழனி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.