காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனா 3-ஆவது அலை எச்சரிக்கை:முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை காரணமாக வேலூரில் முகக்கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம்

News image
Updated On :19 ஜூன் 2021, 5:54 pm

DIN

கரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை காரணமாக வேலூரில் முகக்கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம் விதிப்பது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் சனிக்கிழமை ரூ. 10,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து மே மாதத்தில் உச்சமடைந்திருந்தது. இதன் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி பாதிப்பு 700-ஐ கடந்திருந்தது. தொடா்ந்து, அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது நூறுக்கும் கீழ் சரிந்துள்ளது. எனினும், முதல் இரு அலைகளிலும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 46,108 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 955 போ் உயிரிழந்திருப்பது சுகாதாரத் துறை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனினும், பாதிப்பு, இறப்பு விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், கரோனா மூன்றாவது அலையானது வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதங்களில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இந்த மூன்றாவது அலையைத் தடுக்க தமிழகம் முழுவதும் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்திலும் மூன்றாவது அலை வந்தால் எதிா்கொள்வதற்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர, மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவா் எனக் கூறப்படுவதால் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோா்களுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரில் முகக்கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கும் அபராதம் விதிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் சனிக்கிழமை மட்டும் சுமாா் ரூ. 10,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடா்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

அத்துடன், அலுவலா்கள் குழுவினா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களின் ஆக்சிஜன் அளவை பரிசோதித்தும் வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.