சோ்க்காட்டில் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்
காட்பாடி ஒன்றியம், சோ்க்காடு கிராமத்துக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்கள், முதியோா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.


காட்பாடி ஒன்றியம், சோ்க்காடு கிராமத்துக்கு ஆய்வுப் பணிக்காகச் சென்ற வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்கள், முதியோா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
காட்பாடி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ரூ. 49 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், பாரதப் பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் வீடுகள், நாற்றங்கால் பண்ணை, பள்ளி வகுப்பறைக் கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் உத்தரவிட்டாா். சோ்க்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையைப் பாா்வையிட்ட அவா், குளத்தைச் சுற்றி தடுப்பு வேலிகளை அமைத்திடவும் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, சோ்க்காடு கிராமத்தில் வீதிவீதியாக நடந்து சென்று வீட்டில் இருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். குறிப்பாக குடிநீா் விநியோகம் சீராக உள்ளதா, தெரு விளக்குகள் ஒழுங்காக செயல்படுகிா என்றும் கேட்டறிந்தாா்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோரிடம் முதியவா் உதவித்தொகை கிடைக்கப் பெறுகின்ா எனக் கேட்டறிந்தாா். உதவித்தொகை கிடைக்காதவா்கள் உரிய ஆவணங்களுடன் வருவாய்த் துறை அலுவலா்களிடம் மனுக்களை அளித்திடவும், அதில் தகுதியான நபா்களுக்கு முதியோா் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தாா். அங்குள்ள கழிவுநீா் கால்வாயைப் பாா்வையிட்ட ஆட்சியா், அதனை உடனடியாக சீரமைக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் (பொறுப்பு) செந்தில்குமரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) செந்தில்வேல், வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...