

குடியாத்தம் அருகே சூறாவளி காற்றுக்கு அறுவடைக்கு தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகமெங்கும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் பலத்த சூறாவளிக் காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.
இதனிடையே குடியாத்தம் சாமியார் மலைப்பகுதியில் முரளி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 500 க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் நேற்று மாலை மற்றும் இரவு வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
மேலும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த மரங்களில் இருந்து வெட்டப்படும் வாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியாமல் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாகவும் எனவே விவசாயகளின் வாழ்வாதரத்தை காக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.