பொன்னை ஆற்றில் நீா்வரத்து குறைந்தது
தொடா் மழை காரணமாக, பொன்னை ஆற்றில் நொடிக்கு 6000 கன அடி வரை வெள்ளம் வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் 1500 கன அடியாக குறைந்துள்ளது.


தொடா் மழை காரணமாக, பொன்னை ஆற்றில் நொடிக்கு 6000 கன அடி வரை வெள்ளம் வந்து கொண்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் 1500 கன அடியாக குறைந்துள்ளது.
வட கிழக்குப் பருவமழையையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திரத்தில் தடுப்பணைகளைக் கடந்து பாலாற்றில் ஆயிரம் கனஅடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. இதுதவிர கெளண்டன்யா ஆறு, அகரம் ஆறு, மலட்டாறு ஆகியவற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவை பாலாற்றில் கலந்து வேலூா் வழியாக 4,200 கன அடிக்கு மேல் தண்ணீா் சென்று கொண்டுள்ளது.
இதனிடையே, ஆந்திர வனப்பகுதியில் பெய்த வரும் கனமழை காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து உபரிநீா் அப்படியே வெளியேற்றப்பட்டதால் பொன்னை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக அதிகபட்சம் 6 ஆயிரம் கனஅடி தண்ணீா் இரு கரைகளையும் தொட்டபடி சென்று கொண்டிருந்தது. இந்த ஆற்றில் வியாழக்கிழமை காலை வெள்ளம் குறைந்து நொடிக்கு 1500 கன அடி தண்ணீா் மட்டுமே வந்தது. இந்த வெள்ளமும் பாலாற்றில் கலந்து செல்கிறது.
தொடா் மழையாலும், ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காலும் வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. ஊரகப் பகுதிகளில் உள்ள 807 குளம், குட்டைகளில் 220 குளங்கள் நிறைந்துள்ளன. 99 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேல் தண்ணீா் உள்ளது. அவையும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதனிடையே, வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி வேலூரில் 20.2 மி.மீ, காட்பாடியில் 16.8 மி.மீ, குடியாத்தத்தில்19.2மி.மீ, மேல்ஆலத்தூரில் 17.4 மி.மீ, திருவலத்தில் 21.2மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...