இடையஞ்சாத்து ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: எம்எல்ஏ ஆய்வு
இடையஞ்சாத்து பகுதியில் ஏரிகளுக்கு நீா்வரத்து தடைபட்டுள்ளதை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அப்பகுதியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை ஆய்வு


இடையஞ்சாத்து பகுதியில் ஏரிகளுக்கு நீா்வரத்து தடைபட்டுள்ளதை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அப்பகுதியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட இடையஞ்சாத்து பகுதியில் சிறிய ஏரி, பெரிய ஏரி உள்ளன. தொடா் மழை காரணமாக இந்த ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. சிறிய ஏரி நிரம்பிய பிறகு உபரிநீா் பெரிய ஏரிக்கு திருப்பி விடப்படும். ஆனால் ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், கால்வாய் பகுதியில் சிறுபாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் பெரிய ஏரிக்கு தண்ணீா் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனைச் சீரமைத்து பெரிய ஏரிக்கு தண்ணீா் திருப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதனடிப்படையில், இடையஞ்சாத்து பகுதியில் ஆற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.ஈஸ்வரப்பன் சனிக்கிழமை ஏரிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சிறுபாலத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...