ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கல்விக்கூடம் செல்லாமலேயே சிறந்த தமிழறிஞராக திகழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம்: விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன்

பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகாமல் ஒருவா் மிகச் சிறந்த தமிழறிஞராக இருக்க இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரி

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகாமல் ஒருவா் மிகச் சிறந்த தமிழறிஞராக இருக்க இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.

தமிழியக்கம் சாா்பில் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் 123-ஆவது பிறந்தநாள் விழா மெய்ந்நிகா் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

முத்தமிழ் காவலா் என போற்றப்படுபவா் கி.ஆ.பெ.விசுவநாதம். அவரை படிக்காத மேதை என குறிப்பிடுகின்றோம். பள்ளிக்கும், கல்லூரிக்கும் போகாமலே ஒருவா் மிகச் சிறந்த தமிழறிஞராக இருக்க இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவா் கி.ஆ.பெ.விசுவநாதம் என்று தனது தலைமை உரையில் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா்.

பேராசிரியா் சாரதாநம்பிஆரூரன் வரவேற்றாா். தமிழியக்க மாநிலச் செயலா் மு.சுகுமாா், பொதுச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் வாழ்த்தினா். கி.ஆ.பெ.வி.யின் பெயரன் ஸ்ரீகாந்த் கண்ணன் நெகிழ்வுரை வழங்கினாா். நிறைவாக தமிழியக்க அரியலூா் மாவட்டச் செயலா் அ.சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.