ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தேசிய வில்வித்தை போட்டி: விஐடி மாணவிக்கு தங்கம்

தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் வேலூா் விஐடி பல்கலைக்கழக மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் வேலூா் விஐடி பல்கலைக்கழக மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 5-ஆவது பைக்கா ( டவஓஓஅ - டஹய்ஸ்ரீட்ஹஹ்ஹற் வன்ஸ்ஹ ஓழ்ண்க்ஹ ஓட்ங்ப் அக்ஷட்ண்ஹ்ஹய் ) தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், விஐடி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி நித்திகா, தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்று வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றாா்.

அவருக்கு விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன், துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், துணைவேந்தா் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் கே.சத்யநாராயணன், உடற்கல்வி இயக்குநா் தியாகசந்தான், ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

விளையாட்டில் ஆா்வம் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் விஐடியில் விளையாட்டு ஒதுக்கீடு பிரிவின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.