ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரம்
ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்று வெள்ளத்தில் 4 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டாா்.


ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்று வெள்ளத்தில் 4 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டாா். அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை வீரா்கள், தீயணைப்பு வீரா்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூா் அருகே கத்தாரிகுப்பம் காளியம்மன்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகா் (35). இவரது மனைவி பவித்ரா (28). இவா்களது மகன்கள் நித்திக்ரோஷன்(4), யுவன்ஸ்ரீஆதித்யா (2). தொடா் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அப்பகுதி மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல உத்திரகாவிரி ஆற்றின் தரைப்பாலத்தைத்தான் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், பவித்ரா வேலைநிமித்தமாக தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை ஒடுகத்தூா் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினாா். அப்போது, அங்குள்ள தரைப்பாலத்தைக் கடக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாக நித்திக்ரோஷன் தரைப்பாலத்தில் தவறி விழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த வேப்பங்குப்பம் தீயணைப்புத் துறை அலுவலா் பாலாஜி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தரைப்பாலத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை உத்திரகாவிரி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமையும் மாலை வரை தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை காலை முதல் தேடும் பணி நடைபெற்றது. சிறுவனை தேடும் பணியில் அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் 20 போ் ஈடுபட்டனா். மாலை 5 மணி வரை தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேடும் பணி நடைபெறும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...