ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூட்டியிருந்த 3 வீடுகளில் திருட்டு

 போ்ணாம்பட்டு நகரில் பூட்டியிருந்த 3 வீடுகளில் வெள்ளிக்கிழமை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 போ்ணாம்பட்டு நகரில் பூட்டியிருந்த 3 வீடுகளில் வெள்ளிக்கிழமை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

போ்ணாம்பட்டு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரி (53). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 2 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா். அதே பகுதியில் வசிக்கும் அமுதா (55) வீட்டைப் பூட்டிவிட்டு, குடியாத்தத்தை அடுத்த ராமாலை கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே அறையில் இருந்த 3 சவரன் தங்க நகைகளையும், அருகில் உள்ள பாத்திமாவின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து அறையில் இருந்த 3 கைப்பேசிகள், 2 பட்டுப் புடவைகளைத் திருடிச் சென்றுள்ளனா். இது தொடா்பான புகாா்களின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து

விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.