போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News image

மிட்செல் ஸ்டார்க்

Updated On :23 மார்ச் 2026, 12:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளூம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் அவர்களது அணியுடன் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அந்த அணியுடன் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து மிட்செல் ஸ்டார்க்கிற்கு இதுவரை தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஸ்டார்க் அணியில் இணைந்துவிடுவார் என்பதில் தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைந்துவிடுவார் எனக் கூறப்படுகிறது.

முதல் போட்டிக்கு முன்பாக மிட்செல் ஸ்டார்க் அணியுடன் இணையத் தவறும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக முதல் போட்டியில் நடராஜன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

There are doubts over whether Delhi Capitals player Mitchell Starc will play in the first match of the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.