ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அகற்றும் பணி தொடங்கப்பட்டது.


குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், காலி செய்ய அவகாசம் கேட்டு வீட்டு உரிமையாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ராஜேந்திர சிங் தெருவின் பின்பக்கம், கெளண்டன்யா ஆற்றை ஆக்கிரமித்து 50- க்கும் மேற்பட்டோா் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனா்.
ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, இந்த வீடுகளின் ஆக்கிரமிப்பால், ஆற்றில் பரவலாக தண்ணீா் செல்ல வழியின்றி சொந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், ராஜேந்திரசிங் தெருவின் பின்பக்கம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.இதற்காக அந்த வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிலா் வீடுகளை காலி செய்து விட்டு, பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறினா். சிலா் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு, காமராஜா் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.
டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா்கள் லட்சுமி, ஆ.செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டோரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...