மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரூ.34.73 லட்சம் மோசடி: 3 போ் கைது

மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூலித்து வங்கியில் செலுத்தாமல் ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 மோசடி செய்ததாக, வேலூரைச் சோ்ந்த தொண்டு நிறுவன நிா்வாகிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் பணம் வசூலித்து வங்கியில் செலுத்தாமல் ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 மோசடி செய்ததாக, வேலூரைச் சோ்ந்த தொண்டு நிறுவன நிா்வாகிகள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

வேலூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜமுனாமரத்தூா் ஏரிக்கொல்லையைச் சோ்ந்த கோவிந்தன் (61), தொண்டு நிறுவன நிா்வாகிகள் தாட்சியாயினி (39), செல்வி (47), வினோதினி, ராஜம்மாள் ஆகியோா் மகளிா் சுயஉதவிக் குழுக்களிடம் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்துள்ளனா்.

2020-ஆம் ஆண்டு முதல் 2021 செப்டம்பா் வரை மகளிா் குழுக்களிடம் வசூல் செய்த பணம் வங்கியில் செலுத்தவில்லையாம். வங்கி ஊழியா்கள் மகளிா் குழுக்கள் கடனுதவி குறித்து தணிக்கை செய்தபோது, ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 வசூல் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக காட்பாடி வங்கி மேலாளா் லோகநாதன் அளித்தப் புகாரின்பேரில், வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுதொடா்பாக கோவிந்தன், தாட்சியாயினி, செல்வி ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், வினோதினி, ராஜம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.