ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சலமநத்தத்தில் 5,000 பனை விதைகள் விதைக்கும் பணி: வேலூா் எஸ்.பி. தொடக்கி வைத்தாா்

 வேலூா் சலமநத்தம் பகுதி காவலா் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் 5,000 பனை மர விதைகள் சனிக்கிழமை விதைக்கப்பட்டன.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 வேலூா் சலமநத்தம் பகுதி காவலா் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் 5,000 பனை மர விதைகள் சனிக்கிழமை விதைக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் இதனைத் தொடக்கி வைத்தாா். இப் பணியில் 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீா்மட்டம் உயர முக்கிய பங்காற்றும் பனை மரங்கள், தமிழா்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.

சத்துள்ள பதநீா், நுங்கு, பனங்கிழங்கு போன்ற இயற்கை உணவுப் பண்டங்களை அளிக்கும் பனை மரங்களிலிருந்து கைவினைப் பொருள்கள், விசிறி, கூடை தயாரிப்பு, வீட்டின் கூரைகள் அமைக்கவும் பயன்படுகின்றன.

தமிழகத்தில் இவை வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், பனை மர விதைப்பை ஊக்குவிக்கவும் ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் சலமநத்தம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல் துறை துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சுமாா் 5 ஆயிரம் பனை மர விதைகள் சனிக்கிழமை விதைக்கப்பட்டன.

இந்த பனை மர விதைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் இணைந்து 5 ஆயிரம் பனை மர விதைகளை விதைப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.