ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

குடியாத்தத்தை  அடுத்த  மீனூா்  மலையில்  அமைந்துள்ள  வெங்கடேசப் பெருமாள்  கோயிலில்  சிறப்பு அலங்காரத்தில்  மூலவா்.  பிச்சனூா்  வீர ஆஞ்சநேயா்  கோயிலில்  சிறப்பு அலங்காரத்தில் மூலவா். அப்பு சுப்பையா் வீத

Updated On :19 செப்டம்பர் 2021, 1:38 am

DIN

கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் கோயிலில் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சென்று சுவாமியை வழிபட்டனா்.

குடியாத்தத்தை அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

குடியாத்தம், பிச்சனூா், பலமநோ் சாலையில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா் கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பிச்சனூா் அப்பு சுப்பையா் வீதியில் உள்ள தென்திருப்பதி எனும் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா் கருவறை அடைக்கப்பட்டது. கோயில் முகப்பில் சீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் உற்சவா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தாா். பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.