அஸ்ஸாமில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சித் தலைவர்களும் விறுவிறுப்பாக வந்து தங்களது வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்.
அஸ்ஸாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அஸ்ஸாமில் இருமுனை போட்டி நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸில்
ரைஜோர் தளம், மார்க்சிஸ்ட் கம்யூ., அஸ்ஸாம் ஜாதிய பரிஷத், மலைவாழ் மாநாடு, லிபரல் கட்சி ஆகிய ஆறு கட்சிகள் அடங்கிய கூட்டணியை வழிநடத்திச் செல்கிறது.
திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்காகத் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில், அஸ்ஸாம் கண பரிஷத் தலைவர் அதுல் போரா போக்காகாட் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உடனிருந்தார்.
அதேபோன்று கேஷப் மகந்தவும், காளியாபோர் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த மற்ற பாஜக வேட்பாளர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல்லப் லோச்சன் தாஸ் (விஸ்வநாத்), தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களான ரூப்ஜோதி குர்மி (மரியானி) மற்றும் மிருணால் சைகியா (கும்டாய்) ஆகியோர் அடங்குவர்.
மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயை எதிர்த்துப் போட்டியிடும் ஹிதேந்திர நாத் கோஸ்வாமியும், ஜோர்ஹாட் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்காகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா, பிஹ்புரியா தொகுதிக்காகத் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கிரஸில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்த நந்திதா கார்லோசா, ஹஃப்லாங் தொகுதியிலிருந்து தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தலுக்குப் போட்டியிட அந்தந்த தொகுதியில் தங்களது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தனர்.
2023-ஆம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும். அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
தற்போதைய சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான பாஜகவின் பலம் 64. அதேவேளையில் அதன் கூட்டணிக் கட்சிகளான அஸ்ஸாம் கண பரிஷத் 9, யுபிபிஎஸ் 7, பிபிஎஃப் மூன்று உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 26 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எஐயுடிஎஃப் 15 உறுப்பினர்களையும், சிபிஐ (எம்) ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளது. சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினரும் ஒருவர் உள்ளார்.
Summary
Candidates of all political hues, including ministers, state unit presidents, turncoats and former MPs, filed their nominations for the Assam assembly elections on the last day for submitting documents on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவு!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!
அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


