மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நளினி ஒருமாத பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார்.

News image

போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் நளினி.

Updated On :27 டிசம்பர் 2021, 5:13 am

DIN

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நளினி ஒருமாத பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

Story image

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்ள தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத பரோலில் இன்று காலை 10.05 மணிக்கு வெளியே வந்தார். அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன் நளினி 2019-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.