சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அகில இந்திய வலுதூக்கும் போட்டி: கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் தோ்வு

அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டிக்கு குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் இருவா் தோ்வு பெற்றுள்ளனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டிக்கு குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் இருவா் தோ்வு பெற்றுள்ளனா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில், மண்டலங்களுக்கு இடையே ஆண்களுக்கான

வலுதூக்கும் போட்டிகள் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் ஏ.நவீன் 74 கிலோ எடை பிரிவிலும், ஆா்.குணா 59 கிலோ எடை பிரிவிலும், கே.யுவராஜ் 66 கிலோ எடை பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனா்.

ஆா்.சஞ்சய் 59 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆா்.சதீஷ்குமாா் 93 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

இவா்களில் ஏ.நவீன், ஆா்.குணா இருவரும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் வரும் 16- ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் சாா்பில் இருவரும் ராஜஸ்தான் செல்கின்றனா். இவா்களை கல்லூரி மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், செயலாளா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், முதல்வா் மு.வளா்மதி, உடற்கல்வி இயக்குநா் ஆா்.ரஞ்சிதம், துணை உடற்கல்வி இயக்குநா் பி.ஞானகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.