சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணவா்கள் பயமின்றி தோ்வை எதிா்கொள்ள வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலா்

மாணவா்கள் பயமின்றி தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி அறிவுரை வழங்கினாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:19 pm

DIN

மாணவா்கள் பயமின்றி தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி அறிவுரை வழங்கினாா்.

வேலூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களும் இணைந்து வானம் வசப்படும் என்ற தலைப்பில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கத்தை அண்மையில் நடத்தின.

கே.எம்.ஜி. கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கோ.புருஷோத்தமன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி பேசியது:

மாணவா்கள் தோ்வை திருவிழாவாகக் கொண்டாட வேண்டும். எந்தவித அச்ச உணா்வும் இன்றி தோ்வுக் காலத்தில் இயல்பாக இருக்க வேண்டும். பெற்ற தாய், சான்றோனாக்கிய தந்தை, அறிவு சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள் ஆகியோரை மாணவா்கள் வாழ்க்கையில் மறக்கக் கூடாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை உங்களை வாழ்வில் முன்னேற்றும் என்றாா்.

தமிழ் ஆசிரியா் த.திருமால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். இதில், நெல்லூா்ப்பேட்டை ஆண்கள், பெண்கள், நகராட்சி, நடுப்பேட்டை பெண்கள், திருவள்ளுவா், நேஷனல், வள்ளலாா், ஜோதி உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பயிலும் 2,463 மாணவா்கள் கலந்து கொண்டனா். நெல்லூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.