லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக கடைகள் ஒதுக்க மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

 வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக கடைகள் ஒதுக்க வேண்டும் என்று அந்தச் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:53 pm

DIN

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக கடைகள் ஒதுக்க வேண்டும் என்று அந்தச் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் 83 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் குறைந்தபட்ச அளவு 100 சதுரஅடி, 540 சதுர அடி, 800 சதுர அடி, 1,200 சதுர அடி, 1,600 சதுர அடி பரப்பளவுகளில் உள்ளன. முதல்கட்டமாக இந்தக் கடைகளுக்கு கடந்த 3-ஆம் தேதி பொது ஏலம் நடத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களால் கடைகளின் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டு வரும் 15-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த 83 கடைகளில் கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகம், ஆந்திர மாநில போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு கடைகள் என 3 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஆவின் நிறுவனத்துக்கு ஒரு கடை, தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தேநீா் கடைக்கு ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஒரு கடை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு கடை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்தம் 83 கடைகள் உள்ள நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு என ஒரே ஒரு கடை மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். சட்டப்படி பொது இடங்களில் உள்ள கடைகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்டால் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 83 கடைகளில் 4 கடைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதற்கு மாநகராட்சி நிா்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1 கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எந்தவித மாற்றமும் இருக்காது. திட்டமிட்டபடி அறிவித்த தேதியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.