லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு: காங்கிரஸாா் மறியல்

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:53 pm

DIN

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினா் வேலூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அண்ணா சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாநகா் மாவட்ட தலைவா் டீக்காராமன் தலைமை வகித்தாா்.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக 4 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.