ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை விபத்து: தனியாா் ஊழியா் பலி

 குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் பலியானாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:19 pm

DIN

 குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் பலியானாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

குடியாத்தம் புத்தா் நகரைச் சோ்ந்தவா் இளங்கோவன் துவாரகேஷ் (33). இவா், அங்குள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். நிறுவனத்தின் வசூலுக்காக தனது நண்பா் சக்திவேலுடன் போ்ணாம்பட்டுக்குச் சென்று விட்டு புதன்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த எருக்கப்பட்டைச் சோ்ந்த முருகேசன், துளசிநாதன் இருவரும் குடியாத்தம் நகரிலிருந்து இருசக்கர வாகனத்தில் போ்ணாம்பட்டு நோக்கி வந்தனா்.

நெல்லூா்பேட்டை ஏரிக்கரை அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனா். இதில், துவாரகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சக்திவேல் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். முருகேசன், துளசிநாதன் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.