விநாயகா் சிலைகளை நான்கு ஏரிகளில் கரைக்க அனுமதி: வேலூா் ஆட்சியா்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை நான்கு ஏரிகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை நான்கு ஏரிகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவைக் கொண்டாடும்போது, நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
அந்த வகையில், களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத, நீரில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காக இயற்கை வா்ணங்களையுடைய விநாயகா் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.
இத்தகைய மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வா்ணம் பூசப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
வேலூா் கோட்டத்தில் சதுப்பேரி, ஊசூா் ஏரி, கருகம்புத்தூா் ஏரி, குடியாத்தம் கோட்டம், நெல்லூா்பேட்டை ஏரியில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்படும். மற்ற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைக்கக் கூடாது. விநாயக சதுா்த்தி விழாவை பொதுமக்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி கொண்டாட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...